கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீராமிதுன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்களை மட்டுமல்லாமல் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகிய இருவரையும் தரக்குறைவாக பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பிறகும் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யாவை தன்னுடைய சமூக வலைதளம் மூலம் ஏசிக் கொண்டே இருந்தார்.
முதலில் மீராமிதுன் பேச்சு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதன் பிறகு, இதுக்கு வேற வேலையே இல்லை எனும் அளவுக்கு சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் ரசிகர்கள். இருந்தாலும் மீரா மிதுன் யாரையும் விடுவதாயில்லை. விஜய் சூர்யாவை தமிழ் சினிமாவின் மாபியா குடும்பம் என்று கூட சொல்லிவிட்டார்.
இந்நிலையில் திடீரென விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதற்கு இவர்தான் காரணம் என ஒரு திருநங்கை மீது பழி போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
அப்சரா ரெட்டி என்ற திருநங்கை சைபர் புல்லிங் காரணமாகத்தான் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் தரக்குறைவாக பேசியதாகவும், அதற்கு அவர்களிடமும் அவர்களது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் சரணடைந்து வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அந்த அப்சரா ரெட்டி அதிமுக பிரமுகர் என ஆளும் கட்சியினர் மீது பழிபோட்டுள்ளது தற்போது அரசியல் களத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அந்த அப்சரா ரெட்டி யார்? என்பதை கண்டுபிடிக்க நான்கு பேர் கொண்ட ஒரு குழு மிக தீவிரமாக இறங்கியுள்ளதாம்.