சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குஷ்பு, மீனா போன்ற நடிகைகளை இரட்டை அர்த்தமுள்ள பாடல்களால் வர்ணித்த பாடலாசிரியர்கள்.. அதுலயும் இவரு ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்களும் பல்வேறு விதமான பாடல்களை எழுதியுள்ளனர். ஒரு சில பாடலாசிரியர்கள் இயற்கை சம்பந்தமான பாடல் வரிகளை அமைத்து பல பாடல்களில் ஹிட் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் குறும்புத்தனமான சில பாடலாசிரியர்கள் இரட்டை அர்த்தமுள்ள வரிகளை வைத்து பாடல் அமைத்திருப்பார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரை அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரைக்கும் பல இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் உள்ளனர்.

ஆனால் ஒருசில பாடலாசிரியர்கள் மட்டும் விசித்திரமாக யோசித்து வித்தியாசமாக பாடலை எழுதி உள்ளனர். அது வேற ஒன்றும் இல்லை படத்தில் நடித்த நடிகைகளை வைத்து சில பாடல்களே அமைத்துள்ளனர். அந்த பாடல்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

குஷ்பு: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அண்ணாமலை இப்படத்தில் குஷ்புவை வைத்து வைரமுத்து பாடல் ஒன்றை வைத்திருப்பார். அந்த பாடல்தான் “கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ” இந்தமாதிரி இதுவரைக்கும் எந்த ஒரு பாடலாசிரியரும் குஷ்புவை வைத்து எழுதியதில்லை. ஆனால் வைரமுத்து மட்டும் தான் அசாத்திய மூளையால் இப்பாடலை எழுதியிருப்பார்.

மீனா: சரத்குமார் நடிப்பில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்தான் நாட்டாமை. இப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

மீனா மற்றும் குஷ்பு என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ள இப்படத்தில் மீனாவை மற்றும் வைரமுத்து  “மீனா பொண்ணு”  முழுக்க முழுக்க மீனாவை மையப்படுத்தி எழுதியிருப்பார்.

நதியா: விஜயகாந்த் மற்றும் நதியா நடிப்பில் வெளியான திரைப்படம் பூ மழை பொழியுது. இப்படத்தில் நதியாவை குறிப்பிடும் வகையில் வாலி “நதியா நைல் நதியா” என பாடல் வரிகளை எழுதியிருப்பார்.

nathiya
nathiya

ஜோதிகா: சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்ற திரைப்படம் மாயாவி. இப்படத்தில் பழனி பாரதி என்ற பாடலாசிரியர் “ஜோ ஜோ ஜோ ஜோதிகா” என ஜோதிகாவை பெருமைப்படுத்தும் வகையில் எழுதியிருப்பார். இப்பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்கள் பல பாடல்களை எழுதியுள்ளனர்.இதில் கிட்டத்தட்ட வைரமுத்து மட்டும் 2 கதாநாயகிகளை மையப்படுத்தி பாடல் வரிகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

jothika
jothika

Trending News