தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சேரன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஒன்று துபாயில் பிரம்மாண்டமாக உருவாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் நடந்த மாற்றம் பற்றிய சம்பவத்தை படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.
இன்று எப்படியோ, அன்று சேரன் படம் என்றாலே ஒரு விதமான தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். எப்படியாவது அந்த படத்தில் ஒரு சமூகப் பிரச்சனையையோ, அல்லது ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
அந்த வகையில் சேரனின் அந்த கால படங்களான ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களை பார்க்கும் பலருக்கும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அதுதான் சேரனின் திறமை.
ஆட்டோகிராப் படமே முதலில் விஜய் தான் நடிக்க இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதன் பிறகு சேரன் மற்றும் விஜய் கூட்டணியில் துபாயில் ஒரு முக்கிய பிரச்சனையை பேசும் வகையில் பிரம்மாண்டமாக ஒரு படம் உருவாக இருக்கிறதாம்.
அப்போது விஜய் தொடர்ந்து மூன்று படங்களில் கமிட் ஆனதால் மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்க முடியுமென தெரிவித்துள்ளார். ஆனால் சேரன் தொடர்ந்து எனக்கு 45 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்றதால் அந்த படத்தை ட்ராப் செய்து விட்டாராம் விஜய். சமீபத்தில் கூட விஜய்யை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என சேரன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது பலருக்கும் நினைவிருக்கும்.
இதனை அந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் என்பவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக அப்போதே உலக அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.