பிச்சைக்காரன கூட ஹீரோவாக்குவேன், ஆனா அவர் கூட படம் பண்ண மாட்டேன்.. 17 வருஷமாக முரண்டுபிடிக்கும் பாரதிராஜா

bharathiraja-cinemapettai
bharathiraja-cinemapettai

தமிழ் சினிமாவையே திருப்பி போட்ட இயக்குனர்களின் மிக முக்கியமானவர் பாரதிராஜா. ஹீரோவை நம்பி படம் இல்லை, கதையை நம்பி தான் படம் இருக்கிறது என பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி நாயகர்களாக வலம் வர வைத்தவர்.

அப்படிப்பட்ட பாரதிராஜா குறிப்பிட்ட ஒரு நடிகருடன் 17 வருடமாக படம் செய்ய மாட்டேன் என அடம் பிடிக்க காரணம் என்ன என்பதை தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். சரத்குமார் மற்றும் பாரதிராஜா கூட்டணியில் தகப்பன்சாமி என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருந்ததாம். இந்த படத்தில் சரத்குமாருக்கு இரட்டை வேடமாம்.

படத்தின் முதற்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து சூட்டிங்கிற்கு தயாராக இருக்கும் நேரத்தில் காவிரி பிரச்சனை வந்ததாம். அதில் சரத்குமாருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையில் பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டள்ளது.

இருவரும் மாறி மாறி தங்களை பொன்னான வார்த்தைகளால் புகழ்ந்து கொண்ட பிறகு சண்டை முற்றியதாம். ஒருகட்டத்தில் பொதுஇடங்களில் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டார்களாம். இதனால் உடனடியாக பாரதிராஜா தயாரிப்பாளருக்கு போன் செய்து சரத்குமாருடன் இப்போது இல்லை, என் வாழ்நாளில் இனி அவருடன் இணைய மாட்டேன் என தெரிவித்து விட்டாராம்.

bharathiraja-sarathkumar-cinemapettai
bharathiraja-sarathkumar-cinemapettai

இதனை தயாரிப்பாளர் தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாகவே தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவரும் சந்தித்து கூட பேசிக் கொண்டதில்லையாம். தற்போது வரை இருவரும் முரண்டு பிடிக்க இதுதான் காரணமா என இப்போது தான் கோலிவுட்டுக்கே இந்த விஷயம் தெரிய வந்ததாம்.

Advertisement Amazon Prime Banner