செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

வில்லன் வேடமா? இந்தாங்க பில்லு.. விஜய் சேதுபதி சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய அல்லு அர்ஜுன்

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி வைத்து விட்டதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளது தான் தற்போது பல தயாரிப்பாளர்களும் அச்சத்தை கொடுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்தது. நடிப்பை வெளிபடுத்த கிடைத்த அந்த கதாபாத்திரத்தில் பவானியாகவே வாழ்ந்து காட்டினார் விஜய் சேதுபதி.

இதன் காரணமாக தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் நேரடி தெலுங்கு படமாக வெளியான திரைப்படம் உப்பெண்ணா. இந்த படத்தில் 17 வயதான நாயகிக்கு ராயணம் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக கொடூரமாக இருந்ததாம்.

இதனைப் பார்த்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புஷ்பா என்ற படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி பக்காவாக இருப்பார் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

pushpa-cinemapettai
pushpa-cinemapettai

மாஸ்டர் படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி அல்லு அர்ஜுன் படத்திற்கு 20 கோடிக்கு பில்லு போட்டு கையில் கொடுத்து விட்டாராம். இதைப் பார்த்து தலை சுற்றி போய் நின்ற அல்லு அர்ஜுன், அதைவிட சீப்பான ரேட்டுக்கு மலையாள நடிகர் பகத் பாசில் கிடைத்ததால் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். விஜய் சேதுபதியை விட பகத் பாசில் நல்ல நடிகர்தானே.

Advertisement Amazon Prime Banner

Trending News