மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் என்ற இளம் இயக்குனர் இயக்க உள்ளார்.
முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் ஜூன் 22ஆம் தேதி தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த முறை செம ட்விஸ்ட் ஒன்று உள்ளது. ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால் அதற்கு முன்பே ஜூன் 21-ஆம் தேதி படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப்குமாருக்கு பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் இந்த முறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டருக்கு பிளான் செய்துள்ளார்களாம்.
இதற்காக படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே படத்தின் டைட்டிலை முடிவு செய்துவிடலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. விஜய்யும் பச்சைக்கொடி காட்டி விட்டதால் தற்போது என்ன பெயர் வைக்கலாம் என சன் வட்டாரங்களில் சில டைட்டில்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
டார்கெட் ராஜா, இளைய தளபதி, சரவெடி, வெறித்தனம், ராக் ஸ்டார் போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் விஜய் இதுவரை இல்லாத அளவுக்கு புது விதமாகவும் அதேசமயம் டக்குனு ரசிகர்கள் வைரல் ஆக்குவதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம் தளபதி விஜய்.
