ஆயிரம் பேர் டிக் டாக் வீடியோக்களை குறை சொன்னாலும் சினிமாவில் நுழைவதற்கு அதுதான் துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது. தற்போதெல்லாம் சினிமா நடிகர்களை விட டிக் டாக் வீடியோக்கள் செய்பவர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
நல்லதோ கெட்டதோ எது செய்தாலும் டிரெண்ட் ஆகி விடுகிறது. அந்த வகையில் டிக் டாக் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த இளம் பெண்மணி ஒருவருக்கு தளபதி 65 படத்தில் இரண்டாவது கதாநாயகி சாங்ஸ் கிடைத்திருப்பது தான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.
டிக் டாக் வீடியோக்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமைந்தது. இதன் காரணமாக பலரும் இதை பயன்படுத்தி வந்தனர். அந்தவகையில் கேரளா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் தான் அபர்ணா தாஸ்.
டிக் டாக் வீடியோக்கள் செய்து கொண்டிருந்தவரை அங்குள்ள இயக்குனர் ஒருவர் ஒரு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார் அபர்ணா.

தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டம் திரைப்படமாக உருவாகும் விஜய்யின் தளபதி 65 படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டிக் டாக் வீடியோக்கள் ஆண்களுக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, பெண்களுக்கும் செமையாக ஒர்க்கவுட்டாகி விடுகிறது.
அழகாக இருக்கிறார்கள் என ஆண்கள் லைக் போடுவதால் தான் பெண்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள். இதுஒருபுறமிருக்க ஒரு டிக்டாக் வீடியோ செய்த பெண்மணிக்கு இவ்வளவு பெரிய பட வாய்ப்பா என தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகளும் தற்போது வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.