தமிழகத்தில் இன்னும் இரு நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் களம் அனலை கக்கி வருகிறது. அதிலும் சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.
மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக கட்சியின் சார்பாக முதல்வர் எடப்பாடி யார் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் எதிர்க் கட்சியை சார்ந்த திண்டுக்கல் லியோனி மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது பிரச்சாரத்தின்போது பெண்களைப்பற்றி இழிவுபடுத்தும் விதமாக திண்டுக்கல் லியோனி மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் பேசினார்களாம். இதனால் இவர்களின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 294b ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் 153 கலகம் செய்யத் தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் லியோனி, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் மீது பெண் வழக்கறிஞரான அதிசய கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனவே தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்து கொள்வது கட்சிக்கு நல்லதல்ல என்று அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.