விஜய் சைக்கிளில் வந்ததற்கு பின்னாடி இவ்வளவு பெரிய அரசியல் இருக்கா? மத்திய அரசுக்கு சம்மட்டி அடி!

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகள் இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு போட வந்தனர். ஆனால் தளபதி விஜய் சைக்கிளில் வந்தது தான் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் எப்போதுமே மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தவறியதில்லை. அந்த வகையில் இன்று விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்தது கூட ஒரு வகையான அரசியல் விழிப்புணர்ச்சி தான் என்பதை போல அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

சமீபகாலமாக பெட்ரோல் டீசல் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை யோசிக்கவில்லை.

இன்று எலக்சன் நாள் என்பதால் சரியான தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறியதை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நினைவூட்டும் வகையில் தளபதி விஜய் சைக்கிளில் வந்ததாக கூறுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் டீசல் விலை வேக வேகமாக உயர்ந்து வந்த நிலையில் கடைசி பத்து நாட்களாக பெட்ரோல் டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இது எலக்சனுக்கு காண சூழ்ச்சி என்பதை தற்போதைய மக்கள் புரிந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் விஜய் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்பதை அவர் சைக்கிளில் வந்ததன் மூலம் தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் புரிய வைத்துள்ளார். ஏற்கனவே விஜய் மீது கோபத்தில் இருக்கும் மத்திய மாநில அரசுகள் இதை பார்த்த பிறகு கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தால் விஜய்யை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என இப்போதே திட்டம் தீட்டிருப்பார்கள்.

vijay-cycle-raid-cinemapettai
vijay-cycle-raid-cinemapettai