சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று பார்த்தால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகமாக நடந்து வருகிறது.
அந்தவகையில் முப்பத்தி ஒரு வயது நடிகை ஒருவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சமையலறை சம்பந்தப்பட்ட படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.
மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த படத்தில் நடிக்க முதலில் சாதாரண சம்பளத்தில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார் அந்த 31 வயது நடிகை.
ஆனால் அவருக்கு ஜோடி மார்க்கெட் இல்லாத புதுமுக நடிகர் என்று கூறியதும் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம். படம் என்னுடையது எனவும், என்னை சுற்றி தான் படமே என்பதால் இந்த ரேட் எனவும் தயாரிப்பாளருக்கு பில்லை நீட்டியுள்ளார்.
இவரும் சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறி நடிகை தான். ஆனால் தற்போது மார்க்கெட்டும் மவுசும் வந்துவிட்டதால் தயாரிப்பாளர்களிடம் கெத்துக் காட்டுவதாக கொஞ்ச நாட்களாகவே நடிகை மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதுவும் அந்த ஒல்லி நடிகருடன் இணைந்து நடித்த படத்திற்கு பிறகு நடிகை தலைகால் புரியாமல் அடி வருகிறாராம். படத்தில் ஒப்பந்தம் செய்து பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்பதை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.