சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் சில்மிஷம் கலந்த சிரிப்பு இருக்கும்.
அந்த காலத்தில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ஒரு கட்டத்திற்கு மேல் முருங்கைக்காய் சமாச்சாரம் அனைவருக்குமே போரடித்து விட்டது. இதன் காரணமாக பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தால் பாக்கியராஜ்.
சரி டைரக்சன் பக்கம் போகலாம் என விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய மகன் சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ் டூ என்ற படத்தை எடுத்தார்.
எடுக்காமலேயே இருந்து இருக்கலாம் என்கிற அளவுக்கு இருந்தது அந்த திரைப்படம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் அஜித்துக்கு இந்த மாதிரி கதையில் படம் செய்ய வேண்டும் ஆசை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவருக்கும் குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் இருவரை வைத்து தனித்தனியே குடும்ப பாங்கான கதையில் ஒரு கமர்சியல் படம் செய்ய ஆசை என குறிப்பிட்டுள்ளார். நிறைவேறாத ஆசை தான் என்றாலும் பாக்கியராஜ் கூட்டணியில் விஜய், அஜித் படங்கள் வந்தால் வித்தியாசமாக இருக்கும் என்பது மட்டும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.