தல அஜித்தின் ஒரு படத்திற்கு திருடா என பெயர் வைத்ததில் அவருக்கு இஷ்டம் இல்லை என வேறு ஒரு பெயரை எடுத்துக் கொடுத்தும் அந்த படம் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்ட வில்லை என்பதுதான் சோகமான விஷயமாக உள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.
ஏற்கனவே அஜித்துடன் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் இணைந்துள்ளார். தற்போது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சும்மாவே யுவன் சங்கர் ராஜா இசையை தெறிக்க விடுவார், அதிலும் அஜித் படம் என்றால் சொல்லவே வேண்டாம். வலிமை படத்திலும் அந்த அளவுக்கு சிறப்பான தரமான சம்பவங்கள் பல காத்திருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தல அஜித் தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் வெளியான திரைப்படம் தான் ஜனா. அஜித் மற்றும் சினேகா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டாமல் தோல்வியை தழுவியது.
ஜனா படத்திற்கு முதலில் திருடா என்ற பெயரைத்தான் இயக்குனர் ஷாஜி கைலாஸ் என்பவர் வைத்திருந்தாராம். ஆனால் அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு தல அஜித் தான் ஜனா என்ற பெயரை வைத்தாராம். அப்பவும் எதிர்பார்த்த வெற்றியை அந்தப்படம் பெறாததால் அஜித் மிகவும் வருத்தப்பட்டதாக தல வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்தது.
