வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இரண்டு வருடங்களில் 36 படம் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. அட, நம்ம உலக நாயகனுக்கு நெருக்கமானவர்!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் இரண்டு வருடத்தில் 36 படங்களை நடித்து முடித்துக் கொடுத்த ஒரே நடிகை இவர்தான் என தயாரிப்பாளர்கள் இன்றுவரை அந்த நடிகையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இப்போதெல்லாம் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ ஒரு படத்தை முடித்துவிட்டு கொடுப்பதற்குள் அந்த தயாரிப்பாளருக்கு உயிர் போய் உயிர் வந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் பைவ் ஸ்டார் ஹோட்டல், பென்ஸ் கார் என செலவு பட்டை தீட்டுகிறார்கள்.

ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவருக்கும் வேண்டிய வசதிகளை செய்து தந்தே தயாரிப்பாளர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள் போல. அப்படி அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லி அந்த படத்தை இழுத்தடித்து விடுகிறார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் அப்படியில்லை. எந்த நடிகர் நடிகைக்கும் கேரவன் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மரத்தடியில் உடை மாற்றிய காலமும் உண்டு. அப்படி அந்த காலங்களில் தயாரிப்பாளர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் கௌதமி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 36 படங்களில் நடித்து முடித்தாராம். கால்ஷீட் பிரச்சனை என்ற ஒன்று கௌதமி சினிமா வாழ்க்கையில் வந்ததே கிடையாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இத்தனைக்கும் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த கௌதமி ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் குறித்த தேதியில் படத்தை நடித்து கொடுத்து விடுவாராம். இதன் காரணமாகவே இன்று வரை தயாரிப்பாளர்கள் கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

gauthami-cinemapettai
gauthami-cinemapettai

Trending News