தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிய நடிகை ஒருவர் சமீபகாலமாக ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலம் தான் பார்ப்பவர்களை எல்லாம் கண் கலங்க வைக்கிறது.
உயர்ந்த நடிகையாக இருந்தாலும் கிளாமரில் குறை வைக்காத அந்த நடிகை தற்சமயம் வயது முதிர்வின் காரணமாக இயக்குனர்கள் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி புலம்பி வருகிறாராம்.
ஒரு காலத்தில் இந்த நடிகையை பார்த்து மோகம் கொள்ளாத நடிகர்களே கிடையாது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த நடிகையை பார்த்து ஜொள்ளு விடாத தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.
அப்படி மப்பும் மந்தாரமுமாக இருந்த நடிகை ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டினார். அதற்கு காரணம் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் வெற்றியைப் பெற்றதால் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுக்க முடிவு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.
தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வரும் அந்த நடிகை இப்போதும் ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அந்த நடிகையை எந்த நடிகரின் பக்கத்தில் நிற்க வைத்தாலும் அவருக்கு அம்மா, அக்கா ஒன்று தெரிகிறதே தவிர ஜோடியாக இல்லையென பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த நடிகையின் நெருங்கிய நண்பர்களான முன்னணி நடிகர்கள் கூட ஓரம்கட்டி வைத்து விட்டார்களாம். இந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் வயதாகிவிட்டது என நினைத்து விடுவார்கள் எனக் கூறியதை காதில் கேட்ட அந்த நடிகை தற்போது சோகமே சுமையாக தூக்கி சுற்றிக் கொண்டிருக்கிறார்.