தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு ஏதோ ஒரு இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். காலப்போக்கில் கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுக்கு என ஒரு சிலர் இடம் பிடித்தனர்.
அப்படி அப்போது பிரபலமாக இருந்த விஜய் மற்றும் அஜீத் நடித்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்துள்ளார். ஆனால் தற்போது அவர் சீரியலில் நடித்து வருவது தான் ஆச்சரியமாக உள்ளது.
அதாவது விஜய் மற்றும் அஜீத் நடிப்பில் வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காயத்ரி என்பவர் நடித்துள்ளார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் ஒருசிலருக்கு இப்படத்தில் நடித்த நடிகர்கள் பெயர் கூட யாருக்கும் ஞாபகம் இருக்காது.
அப்போது ஹீரோயினாக நடித்த காயத்ரி அதன்பிறகு சரிவர பட வாய்ப்புகள் அமையாததால் ரோஜா சீரியலில் மாமியாராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மெட்டி ஒலி சீரியலில் சேத்தன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர்கள் காலப்போக்கில் பட வாய்ப்புகள் வராமல் சினிமா துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடிக்கக்கூடிய நடிகர்கள் அதிகமாக உள்ளனர்.