ஒரு படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆன நிலையிலும் அந்த படத்தில் ஒரு சின்ன சாதனையைக்கூட முறியடிக்க முடியாமல் இந்திய சினிமாவே தடுமாறி வருகிறது என்றால் அந்த படத்தின் வெற்றி எவ்வளவு பெரியது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
சினிமாவைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் எதிர்பாராத வகையில் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு காலத்தில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை டப்பிங் செய்து மற்ற மொழிகளில் வெளியிட்டு வந்தனர்.
ஆனால் தற்போது ரிலீஸின் போதே ஐந்து மொழிகளிலும் டப் செய்து ஒரு படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். இதனால் பல வகைகளில் லாபம் வந்து குவிகிறது. ஒரு படம் கைவிட்டாலும் பல படங்கள் இந்திய அளவில் பெரிய வெற்றிகளை குவித்து வருகிறது.
அதற்கு பாகுபலி, கே ஜி எஃப், தங்கல், எம்எஸ் தோனி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் பாகுபலி படங்கள் இந்திய மற்றும் உலக அளவில் செய்த வசூல் சாதனைகளைப் பற்றி சொல்லி தெரிய வேண்டுமா என்ன. பாகுபலி முதல் பாகம் 700 கோடிகளையும், இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் 1700 கோடிகளையும் வசூல் செய்தது.
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடிகளை வசூல் செய்து இதுவரை எந்த ஒரு படமும் கிட்ட கூட வர முடியாத அளவுக்கு மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வைத்துள்ளது. இதனை இனி ராஜமௌலியே நினைத்தாலும் முறியடிப்பாரா என்பது சந்தேகம்தான்.
பாகுபலி 2க்கு அடுத்ததாக அதிக வசூல் செய்த படம் என்றால் தங்கல் படத்தை சொல்லலாம். இந்த படம் உலகம் முழுவதும் 2000 கோடிகளை வசூல் செய்தாலும் இந்தியாவில் 500 முதல் 600 கோடி மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலி-2 படத்தின் சாதனையை இனி வரும் எந்த படம் முறியடிக்கும் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.
