சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்த பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்ற இளம் நடிகை நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பாண்டியராஜின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
சென்னையில் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பாண்டிராஜ் புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தார். கொரானாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை தேறிய சூர்யா படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நாட்கள் கழித்துதான் கலந்து கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் இனிமேல் நான் நடிக்கமாட்டேன் என சூர்யா குறுக்கே திருப்பியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மீண்டும் கொரானோ பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது பரவிவரும் கொரானா வகை அச்சத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டாம் என சூர்யா இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.
இதனால் பாதியில் நிற்கும் சூர்யா 40 படத்தின் கதி அண்ணாத்த திரைப்படத்தை போல் ஆகிவிடுமோ என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கவலையில் உள்ளதாம். அண்ணாத்த படமும் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை படப்பிடிப்பை முடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
