தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் மகளாக இருந்தாலும் அவருக்கு சினிமா துவக்கம் கிடைத்தது என்னமோ அக்கட தேசத்தில் தான். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அங்கு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் வெற்றியை பெறாததால் நமக்குத் தெலுங்கு தான் சரியென அக்கட தேசத்தில் செட்டிலாகிவிட்டார்.
தெலுங்கு படங்களில் எப்போதுமே இந்தி படங்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். பெண் நடிகைகளை காட்சிப்பொருளாக காட்டி கல்லா கட்டுவதில் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை.
அதைப்போல் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் தங்களை கவர்ச்சிக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அறிந்து சம்பளத்தை மட்டும் ஏற்றி கவர்ச்சியை குறைக்காமல் நடித்து வருகின்றனர். அதில் இந்த வாரிசு நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.
பார்க்கவே மப்பும் மந்தாரமுமாக இருக்கும் இவர் அரைகுறை ஆடையில் வந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதேபோல் இந்த நடிகை நடிக்கும் படங்களில் வேண்டுமென்றே இவரை ஸ்லோ மோஷனில் ஓட விடுவார்களாம்.
அப்படிப்பட்ட நடிகை காதல் சர்ச்சையில் சிக்கிக் கொஞ்ச நாட்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்தார். தற்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க களமிறங்கியுள்ள நிலையில் 60 வயது நடிகராக இருந்தாலும் பரவாயில்லை சம்பளம் அதிகம் சேர்த்துக் கொடுத்தால் போதும் ரொமான்ஸ் செய்ய ரெடி என்று பச்சைகொடி காட்டியுள்ளாராம். பணத்துக்காக அப்பா வயது உள்ள நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அந்த நடிகையை கிண்டல் செய்து வருகின்றனர்.