பிரமாண்ட இயக்குனர் என்றால் சங்கர் தான் என ஒரு காலத்தில் கூறிக் கொண்டிருந்த நிலையில் அதெல்லாம் கிடையாது நான்தான் என அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார் ராஜமௌலி.
தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் எக்கச்சக்கமான கோடிகள் செலவு பண்ணி பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.
அந்தவகையில் பாகுபலி படங்களுக்கு பிறகு அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR). இந்த படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்றோரும் நடித்துள்ளனர்.
400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை கிட்டத்தட்ட 900 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துவிட்டது. மேலும் அக்டோபர் 13ஆம் தேதி படத்தை உலகமெங்கும் RRR வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இன்னும் 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு பாக்கியுள்ளதால் மீண்டும் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளி போன RRR படம் மூன்றாவது முறையும் தள்ளிப்போயுள்ளதால் சகுனம் சரியில்லை என்று யோசிக்கிறாராம் தயாரிப்பாளர். ஒருவேளை போட்ட காசு மொத்தம் போய்விடுமோ என கொஞ்சம் கவலையில் இருக்கிறாராம். எப்படியும் போட்ட பணத்தை எடுத்துவிடலாமா என கேட்டதற்கு ராஜமௌலி எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் என கையை தூக்கி விட்டாராம்.
