தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இப்படம் வெற்றியைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி நாயகனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இறுதி வரை தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு நிரந்தரமான இடம் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கு ஒரு சில ஹிட் படங்களை கொடுத்து தனது திறமையை நிரூபித்தார்.
சமீபகாலமாக நடிகர் சித்தார்த் தொடர்ந்து சமூக கருத்துகளை முன்னெடுப்பதும் அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சிப்பது வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதிலும் ஒரு முறை தன்னையும் தன் வீட்டில் இருப்பவர்களையும் கேவலமாக பாஜக தொண்டர்கள் தொலைபேசி மூலம் திட்டுவதாக கூறி டிவிட்டர் பக்கத்தின் மூலம் நரேந்திர மோடி டேக் செய்து அனுப்பி இருந்தார்.
இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது பத்திரிக்கையாளர் மாரிதாஸ் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் டேய் விடியல் எங்கடா, டேய் பெட் எங்கடா, டேய் பிணம் எரிக்க இடம் எங்கடா, டேய் கூத்தாடி சித்தார்த் டேய் உன்ன தான்டா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு எதிரிகளை மதிப்பது தான் தமிழ் நாகரிகம், அதனால் அவரை மதியுங்கள் என்றும், நடிகர்கள் கூத்தாடி என்றால் மாரிதாஸ் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் நீங்கள் ஒரு தொழில் வாயாடி என விமர்சித்துள்ளார்.
தற்போது தைரியமாக பல பேரை விமர்சித்து வந்த சித்தார்த் இப்போது மட்டும் ஏன் வாயமூடி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.