திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அருண் விஜய், உங்க ராசியான இயக்குனரை கொஞ்சம் அனுப்புங்க.. போன் போட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது கமர்சியல் படங்களையும் தாண்டி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் அடுத்தடுத்து சில படங்களிலும் கமிட்டாகி வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் இது மிஷ்கின் எடுத்த சைக்கோ படம் போல இருக்கிறதே என்ற கருத்துக்களும் பரவலாக வந்தது.

இந்நிலையில் அடுத்த படத்திற்காக அருண் விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் ஒருவருக்கு கால் போட்டு அடுத்தப்பட கால்சீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது பல வருடத்திற்கு முன்னால் பேசப்பட்டதாம்.

ஈரம் என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்தான் அறிவழகன். அறிவழகன் எடுக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் அருண் விஜய்க்கு சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது கூட அருண்விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் பார்டர் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதை கேள்விப்பட்ட நயன்தாரா, தனக்கு ஏற்கனவே அறிவழகன் கதை சொல்லியுள்ளாரே என்ற ஞாபகத்தில் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

arivazhagan-director
arivazhagan-director

Trending News