தமிழ் சினிமாவில் எதார்த்த இயக்குனர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் வசந்தபாலனுக்கு சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
முதலில் பெரிய தனியார் மருத்துவமனையில் சேராமல் பொருளாதார சூழ்நிலையால் வீட்டில் அருகில் உள்ள சின்ன மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதி எதுவும் இல்லாததால் நாளுக்கு நாள் இவர்களுடன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வசந்தபாலனின் நுரையீரல் அளவுக்கதிகமாக மோசமடைந்து விட்டது. இனிமேல் உயிர் பிழைக்க மாட்டேன் என முடிவு செய்து வசந்தபாலன் வேறு எங்கேயும் சென்று செலவு செய்ய வேண்டாம் என நினைத்துக் கொண்டாராம்.
ஆனால் வசந்தபாலனின் நண்பர்கள் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கும் படி செய்து அவரை மறுபடியும் டெஸ்ட் எடுத்துள்ளனர். அப்போது அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், அதை சரி செய்வதற்கான மருந்து இப்போது இல்லை எனவும் கைவிட்டு விட்டார்களாம்.
அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 5 மணி நேரமாக இந்த மருந்து கிடைக்க போராடி அந்த மருந்தை தனக்கு செலுத்தி தன்னைக் காப்பாற்றிய நண்பர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
வசந்த பாலனை மருத்துவமனைக்குச் சென்று அவரது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமி பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.