தமிழ் சினிமாவில் சீரியல் நடிகைகள் பல படங்களில் நடித்து வருகின்றனர். அதுவும் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளதால் தற்போது தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சீரியல் நடிகைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து சீரியல் நடிகைகள் பலரும் காதல் வலையில் சிக்கியது தொடர்கதையாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சீரியல் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது யார் என்பதை பார்ப்போம்.
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ஷபானா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு முஸ்லிம். ஆனால் காதலுக்கு கண்ணில்லை என்பது இவர்களது காதலில் தெரியவருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகரான ஆரியன் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இருவரும் காதல் செய்வது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தான் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் சீரியலில் எப்படி காதல் செய்கிறார்களோ அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே காதல் செய்வதாக கூறியுள்ளனர். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.