இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை தான். இந்த சம்பவத்திற்கு என்ன முடிவு கிடைக்கப் போகிறதோ என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பள்ளியில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல பள்ளிகளிலும் இந்த மாதிரி ஆசிரியர்கள் மாணவர்களிடம் அத்துமீறுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிலரோ மானம் மரியாதைக்கு பயந்து வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்திருப்பது பெண் பிள்ளைகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ராஜகோபாலன் என்பவருக்கு என்ன மாதிரி தண்டனை கிடைக்கப் போகிறது என்பதையும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பல நடிகர் நடிகைகளும் சப்போர்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் 96 மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கௌரி கிஷன், தனக்கும் இதுபோன்ற கொடுமை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அதை தற்போது வெளியில் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை தற்போது உணர்வதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனால் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், அதற்கு தன்னால் முடிந்தவரை சப்போர்ட் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.