விஜய் மற்றும் சூர்யா கூட்டணியில் 2000ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் குஷி. விஜய்யின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
வாலி என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த எஸ் ஜே சூர்யா, அஜித்தின் போட்டியாளராக கருதப்பட்ட விஜய்யுடன் இணைந்து குஷி என்ற படத்தை அதைவிட மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுத்து இயக்குனராக ஜொலித்தார்.
வெறும் இரண்டு படங்களில் முன்னணி இயக்குனர்களை ஓரம்கட்டி வெகு வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார். அதன்பிறகு சில படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடித்தார். அதில் சில படங்கள் தோல்வியை சந்தித்தன.
ஆனால் தற்போது ஒரு சிறந்த நடிகராக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா. இது ஒருபுறமிருக்க நேற்று கே டிவியில் குஷி படம் ஒளிபரப்பானது.
அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் கிளைமாக்ஸ் காட்சியில் அப்போது செல்போன் இருந்திருந்தால் படம் 15 நிமிடத்திற்கு முன்னரே முடிந்திருக்கும் என எஸ் ஜே சூர்யாவை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார். அதை கவனித்த எஸ் ஜே சூர்யா உடனடியாக அவர் கொடுத்த பதிவுக்கு இன்னொரு டுவிஸ்ட் வைத்து அவரையே அதிர வைத்துள்ளார்.
காதல் வழியில் செல்போனை தொலைத்து விடுவது போன்ற காட்சியை வைத்து அதை மாற்றி விடுவேன் என அவர் கூறியது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சினிமாவிலேயே இதுதான் கதை என கூறிவிட்டு படத்தை ஆரம்பித்த ஒரே இயக்குனர் இவர்தான் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.