திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

விஜய் டிவி ஜாக்குலின் வெளியிட்ட புகைப்படம்.. இது ஆம்பளையா? பொம்பளையா? என அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டவர் ஜாக்குலின். அதை பார்த்த ரசிகர்கள் அடிக்கடி இணையதளங்களில் கிண்டல் செய்வார்கள்.

ஸ்லிம்மாக மாறி ஜாக்குலின் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார், இந்த சீரியல் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி ஜாக்லின் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய பெண் தோழி ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஆனால் அவர் பார்ப்பதற்கு ஆண்கள் போல் முடி வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கும் ஆண் போலவே இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஜாக்குலின் வலைதளப் பக்கங்களில் அவரது தோழியை பயங்கரமாக அசிங்கப்படுத்திவிட்டனர். இதனால் டென்ஷனான ஜாக்குலின் தன் பங்கிற்கு ரசிகர்களை வெளுத்து வாங்கிவிட்டார். அவங்க அப்பா அம்மா கொடுக்கிற காசுல முடிவெட்டிருக்காங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கேட்ட வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay-tv-jacqueline-frnd
vijay-tv-jacqueline-frnd
- Advertisement -spot_img

Trending News