சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

3 வருடங்களில் 23 ஆபரேஷன் செய்த சியான் விக்ரம்.. வாழ்க்கையை புரட்டிப் போட்ட பயங்கரமான சம்பவம்

விக்ரம் தொடக்க காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளார் என்பது பல ரசிகர்கள் வாய்பே இல்லை. பரமக்குடியில் பிறந்த இவர் உண்மையான பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ். இவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் அப்பாவின் பெயர் ஜான் விக்டர்.

அவர்தான் சினிமாவில் விக்ரமுக்கு ஆசை வர முக்கியமான காரணமாம். லயோலாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார், மெட்ராஸ் IIT-யில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

ஒரு நாள் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது டிரக் ஒன்று அவர் மீது மோதி பயங்கரமான விபத்துக்குள்ளாகி உள்ளார். அதற்குப்பின் காலில் சர்ஜரி செய்து 3 வருடங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காலத்தில் கிட்டத்தட்ட 23 ஆப்பரேஷன் செய்துள்ளதாகவும் அதற்குப் பின்தான் கால் சரியானது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு துயரத்திலும் மீண்டு வர வேண்டும் என்று விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மாடலிங் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கிய விக்ரம் கலாட்டா குடும்பம் என்ற சீரியலில் நடித்து உள்ளார். விக்ரமின் முதல் படம் ‘என் காதல் கண்மணி’.

ஒரு கட்டத்தில் வறுமை கழுத்தை நெறிக்கும் போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களை தேடி அழைத்துள்ளார். அப்போது கிடைத்த வாய்ப்பு தான் சாமுராய் இந்த படம் தான் விக்ரம் சினிமா வாழ்க்கையில் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமாக விக்ரமை கோலிவுட்டில் அடையாளப்படுத்தியது.

அதற்குப்பின் 1999-இல் பாலா இயக்கத்தில் சேது என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கிட்டத்தட்ட 50 மில்லியன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம்தான் அவருக்கு சியான் விக்ரம் என்ற பெயரும் கிடைத்தது.

chiyaan-vikram
chiyaan-vikram

அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார், இவர் நடிப்பில் வெற்றி பெற்று விருதுகளையும் தட்டிச் சென்ற படங்கள் என்று பார்த்தால் ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அண்ணியன், தெய்வத்திருமகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது சில வருடங்களாக விக்ரம் எதிர்பார்த்த அளவு படங்கள் ஓடவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். 2021 ஆம் ஆண்டு கோப்ரா  மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

2022ஆம் ஆண்டு சியான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தனது வாழ்க்கையில் பல அடிகள் பட்டு தான் தமிழ் சினிமாவில் எட்டாத உயரத்தை பிடித்துள்ளார்.

Trending News