விஜய் டிவி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். தனது கீச்சு குரலால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
குக் வித் கோமாளி போட்டியில் கலந்து கொண்ட போது புகழ், பவித்ரா, அஸ்வின் போன்ற பல பிரபலங்களுடன் காமெடியில் பட்டையை கிளப்புவார் சிவாங்கி. இப்படி இருக்க அஸ்வின் மற்றும் சிவாங்கி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
அப்போது கடைசியாக தளபதி நடித்த படம் எது என்று கேட்டதற்கு மாஸ்டர் என்று தெரிவித்துள்ளார். தல அஜித் கடைசியாக என்ன படம் நடித்துள்ளார் என்று கேட்டதற்கு விழி பிதுங்கியது மட்டுமில்லாமல் அடுத்த படம் என்ன இந்த கேட்டதற்கு பதில் கூறவில்லையாம்.
உலகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வரும் இந்த சூழ்நிலையில் ஷிவாங்கி பதில் கூறாமல் இருந்தது அஜித் ரசிகர்களை மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் சிவாங்கிக்கு ஆறுதலாகவும், அஜித் ரசிகர்கள் எதிராகவும் ட்விட்டரில் சண்டை போட்டு வருகின்றனர். இதனால் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில் ‘Inhale Positivity, Exhale Negativity’ என்பது போன்ற பதிவை போட்டுள்ளார்.
இந்த கேப்ஷன் தளபதி விஜய் மேடையில் Ignore Negativity என்று கூறியிருப்பதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. இதனால் தளபதியின் கேப்ஷன் போட்டு தல ரசிகர்களை வெறுப்பேற்றிய உள்ளார் ஷிவாங்கி. படம் பேர் தெரியாது ஒரு குத்தமா இப்படியா போட்டு புரட்டி எடுக்கிறது.