வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் நண்பன் சஞ்சீவ்வுடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா.. செல்பி போட்டது ஒரு குத்தமா.?

3 திருமணங்கள் முடிந்தும் பிரிந்த பின், 4வது திருமணம் முடிந்து விட்டதாக பல சர்ச்சைகள் கிளம்பியது. அதற்கு வனிதா விஜயகுமார் சமீபத்தில் பதில் கொடுத்திருந்தார்.

இப்படி வனிதா அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திருமண வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது என்று சினிமா பக்கம் திரும்பினால் அங்கேயும் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றது.

இப்படி இருக்க திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அது சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் சில பல கேள்விகளை கேட்டனர்.

அந்த புகைப்படத்தில் என்னுடைய சகோதரன் சஞ்சீவ் என்று குறிப்பிட்டிருந்தார். சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார் என்று கேள்வியை ரசிகர்கள் முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த வனிதா தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி சியாமளா மகன் தான் சஞ்சீவ் என்று பதில் அளித்துள்ளார்.

அதற்குப் பின்னர் தான் நெட்டிசன்கள் வனிதா மற்றும் சஞ்சீவ்க்கு இருக்கும் அக்கா-தம்பி உறவுவை நம்பியுள்ளனர். இது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது குறிப்பிடதக்கது.

sanjeev-vanitha
sanjeev-vanitha
- Advertisement -

Trending News