வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

100 பேருக்கு மேல் தேடி எடுத்த பிரபுசாலமன்.. இப்ப கைவசம் 3 படங்களுடன் வலம் வரும் நடிகை

திரைக்கதையில் காடு மூலம் பிரம்மாண்டத்தை காட்டும் மிக முக்கிய இயக்குனர்களில் பிரபுசாலமன் கோலிவுட்டின் அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் நடிகை தேர்வு செய்வதில் அதிக நேரம் செலவிடுவாராம்.

தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக நடிகைகளின் தேர்வு செய்யும் போது 100 நடிகைகளை வேண்டாம் என நீக்கி உள்ளாராம். அதற்குப்பின் ஸ்ரீதா ராவ் என்ற நடிகையை செலக்ட் செய்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இவர் படிப்பதற்காக சென்னை வந்து செட்டிலாகி விட்டாராம். ஆனாலும் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்தி, உருது போன்ற நாடகங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது ஆசை.

ஆனால் சினிமா வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளதாம். பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபுசாலமன் ஸ்ரீதா ராவ் நடிப்பை பார்த்துவிட்டு நீங்கள் அமலாபால் போல் வருவீர்கள் என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

இதைத் தவிர விதார்த்துடன் ஆற்றல் என்ற படத்தில் நடித்து வருகிறாராம் ஸ்ரீதா ராவ். மிஸ்கின் இயக்கத்தில் பிதா என்ற படத்திலும் நடிக்க உள்ளாராம். ஒரு படம் கூட வெளிவராத சூழ்நிலையில் இவரது நடிப்பு திறமைக்கு மட்டும் 3 படங்கள் வரிசைகட்டி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் திறமையை மட்டும் வைத்து வெற்றி பெற முடியும் என்பதை கோலிவுட் வட்டாரத்தில் உள்ள நடிகைகளுக்கு ஸ்ரீதராவ் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

ShritaRao
ShritaRao

Trending News