வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உண்மை சம்பவத்தை படமாக்கும் பாண்டியராஜ்.. சமூகப் பிரச்சினையை கையில் எடுக்கும் சூர்யா 40

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று படம் OTT தளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து  சூர்யாவின் நாற்பதாவது படத்தை பாண்டிராஜன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். திவ்யா துரைசாமி, சரண்யா, பொன்வண்ணன், சத்யராஜ், சூரி என்று ஒரு நடிகர் பட்டாளமே இணைந்து உள்ளனர்.

இமான் இசையில் இந்தப்படம் உருவாகிக் கொண்டு வருகிறது. சமூக அக்கறை கொண்ட சூர்யா தற்போது தமிழகத்தை உலுக்கிய உண்மைச்சம்பவமான பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக உள்ள கதையில் நடிக்க உள்ளாராம்.

பொள்ளாச்சியில் பல பெண்களை வீடியோ எடுத்த அதனை வைத்து மிரட்டிய கும்பலின் முகத்திரையை கிழிக்கும் படமாக கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதைத் தவிர சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

suriya-cinemapettai
suriya-cinemapettai

Trending News