வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கார்த்திக் சுப்புராஜை அடுத்து வெறித்தனமான சூப்பர் ஸ்டாரின் ரசிகன்.. ரஜினியை இயக்கினால் கதை இப்படித்தான் இருக்குமாம்!

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற மெகாஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் நடிகை நயன்தாராவின் காதலருமாவார். தமிழில் சிறப்பான படங்களை இயக்கிய விக்னேஷ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.

திரையுலகிற்கு வருவதற்கு முன்பு அவரும் வழக்கமான ரஜினி வெறியர்களை போலவே கட் அவுட் வைப்பது. தலைவர் படத்தின் முதல் நாள் முதல்ஷோ பார்ப்பது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்று இருந்தவர் தானாம்.

சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா முதன் முதலாக ஜோடி சேர்ந்த சந்திரமுகி காலத்தில் இவர் தலைவர் ரசிகர் தானாம். நடிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பதில் பெருமை கொள்வது வழக்கமான ஒன்று.

ஆனாலும் இவர் சற்றே அதனை கடந்து தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவற்றை குறிப்பிடுகிறார். சமீபத்தில் சண்டே டெஸ்ட் என்ற கருத்தாய்வில் இவரிடம் கொடுக்கப்பட்ட கேள்விக்கு “சூப்பர் ஸ்டார் தங்களோடு இணையும் பட்சத்தில் படம் எப்படி எடுப்பீர்கள்” என்பதே கேள்வி.

இதற்கு பதிலளித்த விக்கி கூறிதாவது “நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவை கலந்த ஒரு பொழுது போக்கு திரைப்படம் எடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

vignesh-shivan
vignesh-shivan

விக்கியின் குரல் தலைவர் ரசிகர்களுக்கு எட்டியாயிற்று தலைவருக்கும் விரைவில் எட்டும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்களோடு காத்திருக்கிறோம்.

Trending News