வெறும் 50 பேர் கல்யாணத்துக்கு ஷங்கர் செய்த செலவு எவ்வளவு தெரியுமா? பிரம்மாண்டம் என்று சும்மாவா சொல்றாங்க!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படமே தாறுமாறு வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், அந்நியன், ஐ, 2.O போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும் ஷங்கரின் மகள் திருமணம் மட்டும் சும்மா இருக்குமா என்ன.

சங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவரான ஐஸ்வர்யா ஷங்கருக்கு சமீபத்தில் புதுச்சேரி இரஞ்சி அணியின் கேப்டன் ரோஹித் என்பவருடன் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் அரசாங்க உத்தரவு படி 50க்கும் குறைவான ஆட்களே கலந்து கொண்டனர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

50 பேருக்கும் குறைவான இந்த கல்யாணத்திற்கே சங்கர், கிட்டத்தட்ட 15 முதல் 20 கோடி வரை செலவு செய்துள்ளாராம். மேலும் விரைவில் பழைய நிலை திரும்பிய பிறகு சென்னையில் இதைவிட இன்னும் பிரமாண்டமாக செலவு செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளாராம்.

mk-stalin-attended-shankar-daughter-marriage-function
mk-stalin-attended-shankar-daughter-marriage-function