என்னால் 1 கோடியில் கூட படம் எடுக்க முடியும், ஆனால் எடுக்க மாட்டேன்.. காரணத்தைச் சொன்ன சங்கர்

இந்திய சினிமாவில் உள்ள இயக்குனர்களில் டாப் 5 இடத்தில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவரது படங்களுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுள்ள கதைகளை கமர்ஷியல் ரீதியாக சொல்வதில் வல்லவர்.

அதேபோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரம்மாண்டத்தை கூட்டுவதிலும் சிறந்தவர். சங்கர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே பிரமாண்டங்களை கடைப்பிடித்து வந்ததால் தற்போது அவரது படங்களின் பட்ஜெட் மட்டுமே 500 கோடி, 600 கோடி ரேஞ்சுக்கு வந்துவிடுகிறது.

அப்படி இருந்தும் தயாரிப்பாளர்கள் பலரும் ஷங்கரை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதல் சாய்ஸ் இயக்குனர் ஷங்கர் தான். இந்தியன் 2 படம் நினைத்தபடி வராததால் தற்போது அடுத்தடுத்த மொழிகளில் அங்குள்ள முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஷங்கர்.

shankar-cinemapettai-01
shankar-cinemapettai-01

அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ஒரு படமும், ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்த படங்களின் பட்ஜெட்டும் வழக்கம்போல் ஷங்கரின் பிரம்மாண்டம் தான்.

இப்படி பிரமாண்டத்தின் மொத்த உருவமாக இருக்கும் சங்கரிடம் ஒருமுறை யூடியூப் சேனல் பேட்டி எடுக்கும் போது, உங்களால் 5கோடி அல்லது அதற்கும் குறைவான பட்ஜெட்டில் படமெடுக்க முடியாதா? என கேள்வி கேட்டனர். என்னால் 5 கோடி என்ன ஒரு கோடிக்கு கூட படம் எடுக்க முடியும். ஆனால் அப்படி எடுக்க முடியாத சூழ்நிலையில் இப்போது இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அப்படி படம் எடுத்தால் என்னுடைய வீட்டில் இருப்பவர்களே அந்த படத்தை பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் எனவும், ஒரு குறிப்பிட்ட இடத்தை தொட்டு விட்டதால் நானே விருப்பப்பட்டு எடுத்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார். அதனால்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனக்கு பிடித்த எதார்த்தமான சின்ன சின்ன கதைகளை தயாரித்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷங்கர்.