தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே கொடி கட்டி பறந்த நடிகர் விஜய் அண்மைக்காலமாக மற்ற மொழிகளிலும் தனது படங்களின் மூலம் வெற்றி கண்டு வருகிறார்.
மேலும் அனைத்து மொழியிலும் விஜய்க்கு ரசிகர்கள் உருவாகி வருவதால் தமிழ் தாண்டி மற்ற மொழி நடிகைகளும் விஜய்யுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் அதற்கு காரணம் விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான்.
திரைக்கு புதிதாக வரும் பல்வேறு நடிகைகளுக்கும் இலக்கு தமிழின் முண்ணனி ஹீரோக்களுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பதே. அவ்வரிசை வெகு தூரம் நீண்டதாக இருந்தாலும் அதற்காக அவரவர்களாக தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் நடிகைகள் பலரும். முன்பு ரஜினி கமலுடன் நடிப்பது இலக்காக வைத்தது போலவே இப்போது தலதளபதயுடன் நடிப்பதை இலக்காக வைக்கின்றனர்.
அதை போலவே தமிழ் தெலுங்கில் பிரபலமான நடிகை “ரஷ்மிகா” எக்ஸ்பிரசன் குயின் என செல்லமாக அழைக்கப்படும் இவருக்கும் அதே ஆசை தான். ஆரம்பத்திலிருந்து விஜய் ரசிகையான இவர் விஜயுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார். தளபதியுடன் ஒரு படமாவது நடிப்பேன் என காண்ஃபிடன்டாக கூறி வருகிறார்.
ரசிகர் கேட்ட கேள்விக்கு ஐ லவ் தளபதி என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் மேலும் எதிர்பார்த்ததைவிட இவர்களுடைய நடிப்பு பிரமாதமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
இதனை அறிந்த இயக்குனர்கள் பலரும் விஜயை வைத்து படம் எடுப்பதாக இருந்தால் அப்படத்தில் ராஷ்மிகா நடிக்க வைத்து விடலாம் என நினைத்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.