அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியானால் சோசியல் மீடியாக்களில் அதிர்வேட்டு தான். ரசிகர்கள் உற்சாகத்தில் மிதப்பார்கள். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் தன் பங்கிற்கு அவரது படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூரரை போற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 40 என பெயரிட்டுள்ளனர்.
கதாநாயகியாக பிரியங்கா மோகனும், குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும், இசை அமைப்பாளராக இமானும் பணியாற்றி வருகிறார்கள்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இவை தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ , கவுதம் மேனனின் வெப் சீரீஸ் என சூர்யா கைவசம் படங்கள் உள்ளன. ஆளாளுக்கு அப்டேட்களை தெறிக்க விட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமே சோசியல் மீடியால இளசுகளின் ரவுசு சத்தமா கேட்கும் போல.