நயன்தாராவை கேவலப்படுத்திய பிரபல இயக்குனர்.. உண்மைய மறைமுகமா சொன்னா கோவம் வரத்தான் செய்யும்!

ஜூன் 25ல் வெளிவந்து வெற்றி நடை போடும் திரைப்படம் மேதகு. இலங்கை தமிழர் விடுதலைக்காக போராடிய மாவீரன் பிரபாகரனின் இளமைப்பருவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியது இந்த படம். இப்படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டு.

படம் வெளியாக இணையத்தை அதிர வைக்கும் அதே தருணத்தில் கிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட சமூக வலைதள பதிவுகளை தோண்டி எடுத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

இதில் தற்போது நயன்தாராவின் மூன்று காதல் மற்றும் காதலர்களையும் ஒப்பிட்டு பகவத்கீதையின் வாசகங்களையும் அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

kittu
kittu

ஏற்கனவே மாறுபட்ட அரசியல் தலைவர்களை பற்றி கிட்டு பதிவிட்ட பதிவுகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது நயன்தாராவை பற்றிய பதிவு “மாவீரனின் படத்தை எடுத்த இயக்குனரின் பெண்கள் மீதான பார்வை இதுதான்” என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து இயக்குனர் கிட்டு ஒரு வீடியோ வெளியுட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :- நான் வழக்கமாக சில வருடங்களுக்கு முன்பு இட்ட பதிவுகளை மேதகு திரைப்படத்தின் வெற்றியை சரிப்பதற்காக எப்போதோ எதற்காகவோ பதிவிட்ட பதிவுகளை தேடி எடுத்து சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள். இவ்வாறு கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் அந்த மீம்ஸ் குறிப்பிட்டுள்ளது உண்மைதானே அவர் வருடத்திற்கு ஒருவரை காதலித்து தானே வருகிறார் எனவும் கூறிவருகின்றனர்.