வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ராசி கண்ணா கைவசம் இவ்வளவு படங்களா?

கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா. இதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழில் ஆர்யாவுடன் அரண்மனை 3, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், ஜீவாவுடன் மேதாவி, கார்த்தியுடன் சர்தார், சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதேபோல் மலையாளத்தில் பிராமம், தெலுங்கில் பக்கா கமர்சியல், தேங்க்யூ, ஹிந்தியில் டீகே இயக்கும் வெப் சீரிஸ் என கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராசி கண்ணா சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகரித்து இருந்தாலும், பெண்கள் தங்கள் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி முன்னேறி வருகிறார்கள்.

இதற்கு உதாரணமாக பல நடிகைகளை கூறலாம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகள் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதேபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன்.

raasi-khanna
raasi-khanna

எனக்கு நடிக்கவும், பாடவும் தெரியும் தற்போது இசையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு கடினமான கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ உங்க காட்டுல அடைமழை தான் போங்க.

Trending News