விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் முருகதாஸ். இப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை, மௌனகுரு போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் ஆடுகளம் படமே இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
காமெடி நடிகராக மட்டுமே தோன்றிய முருகதாஸ் விசாரணை, 96 ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிரட்டி இருந்தார். தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக வலம் வரும் முருகதாஸ் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.
ஹென்றி இயக்கத்தில் ராஜாமகள் எனும் படத்தில் முருகதாஸ் கதாநாயகனாக நடித்து உள்ளார். க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் சார்பில் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிக்கிறார். இவருக்கு மனைவியாக வெலினா மற்றும் பக்ஸ் பகவதி, பேபி பிரிதிக்சா, ஈஸ்வர், மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, ராம், விஜய்பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்ப தந்தைகள் தங்களது பிள்ளைகள் ஆசைப்பட்டத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவிப்பதையும், தந்தை மகள் இடையிலான பாசப்போராட்டத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். மணிஅமுதவன் பாடல்கள் எழுத, சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் பி.அஜித்குமார் படத்தொகுப்பு செய்கின்றனர். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து டீசர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
பல பேர் பாடங்களை தயாரிக்கும் தனுஷ் இனிமேல் முருகதாஸ் நடிக்கும் படங்களை தயாரிப்பார் எனவும் கூறி வருகின்றனர். தமிழில் ஹீரோவாக களமிறங்கும் இதே சமயத்தில் பியாலி எனும் படம் மூலம் மலையாள சினிமாவிலும் முருகதாஸ் அறிமுகமாக உள்ளார். வாழ்த்துக்கள் ப்ரோ…..