இலங்கை தமிழரான லாஸ்லியா மரியநேசன் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியாவின் குரலும், அவரது இலங்கை தமிழுமே ரசிகர்களுக்கு அவரை பிடிக்க காரணமானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார் லாஸ்லியா. தற்போது பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார். இதன்மூலம் ஹர்பஜன்சிங் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதேபோல் லாஸ்லியாவிற்கும் இதுதான் முதல் படம் ஆகும்.
தற்போது பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். முதல் பாடலாக வெளிவந்துள்ள அடிச்சு பறக்கவிடுமா பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து லாஸ்லியா பாடியுள்ளார்.
இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தேவாவுடன் இணைந்து லாஸ்லியா பாடும் மேக்கிங் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.