ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் இசையமைப்பாளர்.. நீங்களாஅப்ப ஓகே!

தமிழ் சினிமாவில் இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவரும் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் தற்போது அடுத்தடுத்த தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் மேலும் ஒரு இசையமைப்பாளர் இணைய உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழில் வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய தேவிஸ்ரீ பிரசாத், தற்போது தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் பிரபல நடிகையான சார்மி தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இவர் தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லைகர் படத்தை சார்மி தயாரித்து வருகிறார்.

devi sri prasad
devi sri prasad

இப்படம் முடிந்த பின்னர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை சார்மி தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News