கடந்த சில நாட்களாகவே ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம தளபதி விஜய் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். விஜய் பற்றியோ அல்லது அவரது புதிய படங்கள் பற்றியோ எந்த ஒரு அப்டேட் வந்தாலும், அன்றைய தினம் அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவையே ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.
அதற்கேற்றார்போல் கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் சமூக வலைத்தளங்களிலும், யூ டியூப்களிலும் சில பல சாதனைகளைப் படைத்து வருகிறது. டிவிட்டரில் விஜய்க்கென ஒரு அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. அந்தப் பக்கத்தில் மிக மிக முக்கியமான அப்டேட்டுகளை மட்டுமே பதிவிடுவார்கள். இதுவரை டிவிட்டர் தளத்தில் அதிகபட்ச லைக்குகளைப் பெற்ற புகைப்படம், போஸ்டர் என்ற டாப் 3 சாதனைகளை விஜய் படங்கள் தான் வைத்திருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் மரம் நட்ட புகைப்படங்கள் 4,72,000 லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றபோது வேன் மீது ஏறி தனது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் 4,53,000 லைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் 3,08,000 லைக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் 3,06,000 லைக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. மாஸ்டர் பர்ஸ்ட் லுக் சாதனையை பீஸ்ட் முறியடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் தளபதி ரசிகர்கள்னா சும்மாவா தெறிக்க விடுவோம்ல என விஜய் ரசிகர்கள் கெத்து காட்டி வருகிறார்கள்.