வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மகன் முத்தத்தை கொச்சையாக பேசி ரசிகர்.. கிழித்தெறிந்த நடிகை விஜயலட்சுமி

சென்னை 600028 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. முன்னாள் இயக்குனர் அகத்தியனின் மகள். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார் விஜயலட்சுமி.

ஆனால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை.இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன விஜயலட்சுமிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் விஜயலட்சுமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் படி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

vijayalakshmi-son-kissed-photo
vijayalakshmi-son-kissed-photo

இதைப் பார்த்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ரசிகர் ஒருவர் அந்தப் புகைப்படத்திற்கு கொச்சையாக ஒரு கமெண்ட் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான விஜயலட்சுமி அந்த ரசிகரை கிழித்தெறிந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயலட்சுமி அந்த பதிவில், குழந்தைகிட்ட பண்ண வேண்டிய விஷயங்கள் என லிஸ்ட் வச்சிருக்கியா, பரதேசி, இதைப் பார்த்ததும் உனக்கு பல்பு எரியுதா, இதை எல்லாம் நேரில் வந்து பேசுங்கடா, இதுக்கு சப்போட்டா இன்னொரு எச்ச என கண்டபடி பேசிவிட்டார் விஜயலட்சுமி.

vijayalakshmi-tweet
vijayalakshmi-tweet

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் பிரபலங்களுடன் ரசிகர்கள் சண்டை போடுவது வாடிக்கையாகிவிட்டது. ரசிகர்களும் எல்லை மீறி பேசி விடுகின்றனர். இதனால் கோபப்படும் பிரபலங்களும் தங்கள் வாய்க்கு வருவதை பேசி விடுகின்றனர்.

ரசிகர்களும் ஒரு அளவுடன் சமூக வலைதளங்களில் நடந்து கொள்ள வேண்டும். தாய்மை பற்றிய இந்த பதிவில் தவறாக பேசியவர்களைக் கண்டிக்க வேண்டும் எனும் அளவுக்கு விஜயலட்சுமியின் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்துள்ளனர்.

Trending News