ஷகிலா பட ரேஞ்சுக்கு உருவாகியிருந்த நியூ பட பாட்டை ஏன் வெளியிடவில்லை? எஸ் ஜே சூர்யா கொடுத்த விளக்கம்

எஸ் ஜே சூர்யா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பழைய கால படங்களில் ஹீரோயின்களுடன் அவர் செய்யும் ரொமான்ஸ் தான். மற்ற ரொமான்ஸ் படங்களை காட்டிலும் எஸ் ஜே சூர்யா படங்களில் அதிகமாகவே இருக்கும்.

இதனால் பெரும்பாலான நடிகைகள் எஸ் ஜே சூர்யாவுடன் நடிக்க தயங்கி வந்தனர். இவ்வளவு ஏன், சமீபத்தில் வெளிவந்து குழந்தைகள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த மான்ஸ்டர் படத்தில் கூட நடிக்க முதலில் பிரியா பவானி சங்கர் யோசித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு எஸ் ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் இருவருக்கும் காதல் என ஒருபக்கம் கிளப்பி விட்டனர். அந்த பஞ்சாயத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து தற்போது இருவரும் அவர்களது வேலையை பார்க்க சென்று விட்டனர்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் எஸ் ஜே சூர்யா. பந்தா காட்டாமல் சாதாரண ரசிகர் கமெண்ட் செய்தால் கூட அதற்கு ரிப்ளை செய்யும் மனசு கொண்டவர்.

sj-suriya-tweet
sj-suriya-tweet

அந்த வகையில் நியூ படத்தில் இடம்பெற்றிருந்த மார்க்கண்டேயா என்ற பாடல் ஆடியோவாக மட்டுமே வெளியானது. வீடியோவாக வரவில்லை. அது ஏன்? என ரசிகர் ஒருவர் எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டார்.

அதற்கு எஸ் ஜே சூர்யா, அந்த பாடல் அளவுக்கதிகமான ரொமான்ஸ் காட்சிகளுடன் உருவானது எனவும், அதனால் அதை ரிலீஸ் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். இப்போது அதை ரிலீஸ் செய்யலாமே? என மற்றொரு ரசிகர் கேட்க, அப்போ இருந்த எஸ் ஜே சூர்யா இப்போ நல்ல பையன் ஆகிவிட்டேன் என கலகலப்பாக ரிப்ளை கொடுத்துள்ளார்.