பிரபல மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் தமிழில் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் என்றும் கூறலாம்.
மீரா மிதுன் கோலிவுட்டில் இருக்கும் அனைவரும் தன் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவதாகவும், அதை தடுக்க சதி செய்வதாகவும் தொடர்ந்து கூறி வருவதோடு, தன் ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
இது மட்டுமின்றி சமூக வலைதளத்தில் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரிடம் எல்லாம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பியவர் மீரா மிதுன்.
இவர் தற்போது அன்பரசன் இயக்கி வரும் பேய காணோம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். பேய காணோம் என்று புகார் செய்யும் வித்தியாசமான படமாக உருவாகி வரும் படத்தில் கவுசிக் ஹீரோவாகவும், மீரா மிதுன் தான் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மீரா மிதுன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கொண்டு சிகரெட் பிடித்திருக்கிறார். இப்படி செட்டுக்குள் புகைப்பிடிப்பது தவறு என இயக்குநர் கண்டித்துள்ளார். மேலும், நீங்கள் தம்மடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை கேராவனுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செட்டுக்குள் எல்லாம் புகைப்பிடிக்கக் கூடாது கிளம்புங்கள் என கோபத்தில் திட்டியுள்ளார்.
சோசியல் மீடியால மீரா மிதுன் போடுற போட்டோவையும், வீடியோவையும் பார்த்துட்டு ரசிகர்கள் கிட்ட வாங்குற திட்டவிட இது ஒன்னும் பெருசு இல்லப்பா….