தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா. அதன் பிறகு பல நடிகர்களுடன் பல படங்களில் பணியாற்றினார் இருந்தாலும் இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.
அதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தினார் அங்கும் அவருக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் வராததால் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். அதனால் சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை.
தற்போது இவர் அவரது கணவருடன் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது