தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விரைவில் ஸ்பெயின் செல்ல உள்ளதாம் படக்குழு.
பத்து நாட்கள் கண்டிப்பாக வெளிநாடுகளில் படமாக்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் கிளம்பி செல்கிறது வலிமை படக்குழு. அது முடிந்ததும் இந்த வருட இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
அதைப்போல் விஜய் சேதுபதி தற்போது கைவசம் 26 படங்கள் வைத்துள்ளார். தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து தற்போது வரை ஒரே நேரத்தில் கைவசம் அதிக படங்களில் வைத்திருக்கும் முதல் நடிகர் விஜய் சேதுபதிதானாம்.
விஜய் சேதுபதி ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் நல்ல நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார். அதேபோல் முன்னணி நடிகர்களுக்கு வில்லன் வேடம் என்றால் சம்பளத்தை கொஞ்சம் கூட்டி எப்போது வேண்டுமானாலும் வரத் தயார் என கூறி விடுகிறார்.
இதன்காரணமாகவே சுத்தி சுத்தி நடித்து வரும் விஜய் சேதுபதியிடம் சமீபத்தில் நிருபர் ஒருவர் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி, எனக்கு ஈகோ சுத்தமாக இல்லை.
அதன் காரணமாகவே அஜித்துடன் ஒரு படம் அல்ல, 10 படம் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட தற்போது கமல்ஹாசனுடன் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
