செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரஜினியே வாடா போடா என அழைத்த நடிகர்.. டென்ஷனான பி.வாசு, சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்துக்கு அறிமுகமே தேவையில்லை. சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமாகி, தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி தற்போது சூப்பர் ஸ்டாராக வளர்ந்தள்ளார்.

இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரை ஒரே ஒரு நடிகர் மட்டும் வாடா போடா என உரிமையோடு அழைப்பாராம். அதுவும் அவர் ஒரு காமெடி நடிகர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாங்க அவர் வேறு யாருமல்ல, காமெடி மன்னன் கவுண்டமணி தான் அந்த நடிகர்.

கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை வாடா போடா என்றுதான் அழைப்பாராம். ஒருமுறை பி.வாசு இயக்கத்தில் ரஜினியும், கவுண்டமணியும் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் ரஜினியை கவுண்டமணி வாடா போடா என அழைக்க.

அப்படத்தின் இயக்குனர் பி.வாசு கவுண்டமணியிடம் ரஜினியை போய் வாடா போடா என அழைக்கிறீர்களே என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கவுண்டமணி அவன் என்னை விட வயதில் சிறியவன், நான் சீனியர் அப்படி அழைப்பதில் என்ன தவறு என கூறியுள்ளார்.

உடனடியாக ரஜினி ஓடி வந்து அவர் சீனியர், வயதில் பெரியவர் அப்படி அழைப்பதில் தவறு இல்லை எனக்கூறி வாசுவை சமாதானம் செய்தாராம். இந்த தகவலை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

goundamani
goundamani

Trending News