தமிழ் திரையுலகின் ஒப்பற்ற இயக்குனர்களில் வெற்றி மாறனும் ஒருவர். ஆடுகளம் வடசென்னை என இவரின் சிந்தையும் செயல்பாடும் செயல்படுத்தும் விதமும் மிகவும் மாறுபட்டது.
எப்போதும் நான்கு வருடத்திற்கு ஒரு படம் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என இயக்கவந்த வெற்றிமாறன் இப்போது செய்தியாளர்களையும் சந்திக்க நேரமில்லாமல் போனாராம்.
நீண்ட இடைவெளிகளில் படத்திற்கான நேரத்தை செலவிடும் வெற்றிமாறன் இப்போது படு பசிசயாக உள்ளார். ஒரு பக்கம் விஜய் சேதுபதியுடன் விடுதலை இயக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வெற்றி மாறனின் எழுத்தில் சில படங்கள் தயாராகி வருகின்றன.
ஒரு பக்கம் சூர்யாவின் வாடிவாசல் தொடர்பாக பேச்சுவார்த்தை என பிசியான ஷெட்யூலில் வெற்றி மாறன். இந்நிலையில் இப்போது வெப் சீரியல் ஒன்றை இயக்க விருக்கிறாராம் வெற்றி மாறன். இது ஜி5 வெளியிடுகிறதாம், இப்போது இயக்குனர காட்டில் அடை மழை தான்.
நெட்ப்ளிக்ஸ் தலத்தில் பாவ கதைகள் என்ற வெப் சீரியலில் ஒரு பாகத்தை வெற்றிமாறன் எடுத்து இருப்பார். இந்த வெப் சீரியலில் 4 இயக்குனர்கள் எடுத்த கதையில் வெற்றிமாறன் கதை தான் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன் தற்போது தளபதி விஜயுடன் கூட்டணி சேரப் போவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
