வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டாப்ஸிக்கு கொக்கி போடும் பிரபல அஜித் பட இயக்குனர்..

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படமே வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமானார்.

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த டாப்ஸி தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வரும் டாப்ஸி அதற்காக பலரது பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

தற்போது அவருக்கென்று ஹிந்தியில் தனி மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் அவருக்கு கதை சொல்ல ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ் சினிமா இயக்குனர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் சென்னை-28 படம் மூலம் பிரபலமான இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் விதமாக ஒரு கதை எழுதி அதை டாப்ஸியிடம் சொல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாராம்.

ஒரு வேளை கதை ஓகே ஆகிடுச்சுனா வழக்கம்போல பிரேம்ஜிக்கும் ஒரு கேரக்டர் குடுத்து ஹிந்தியில அறிமுகப்படுத்திடுவாரோ?

premji-venkatprabhu-sentiment
premji-venkatprabhu-sentiment

Trending News